• Mo. Dez 9th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

1,200 மீட்டர் பள்ளத்தில் விழுந்த கெப் வாகனம். இருவருக்கு நேர்ந்த கதி

Mrz 15, 2022

தெல்தோட்டை – ஹேவாஹெட்ட வீதியில் நாரங்ஹின்ன பிரதேசத்தில் கலஹா நோக்கிச் சென்ற கெப் வாகனம் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கெப் வாகனம், வீதியை விட்டு விலகி சுமார் 1,200 மீட்டர் பள்ளத்தில் விழுந்தது.

கெப் வாகனத்தின் ஓட்டுனரும் அவருடன் வந்த மற்றுமொருவரும் பலத்த காயங்களுடன் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 35 மற்றும் 64 வயதுடைய குன்னாபான மற்றும் கம்பளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் பேராதனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த விபத்தானது கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தியமையினால் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் கலஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed