இலங்கையில் உயிருடன் இருக்கும் ஒருவருக்கு மரண சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எம்பிலிபிட்டிய செவனகல பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

48 வயதான டபிள்ஸ்.ஈ.சரத் என்பவருக்கே இவ்வாறு மரண சான்றிதழ் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2018ம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் உயிரிழந்ததாக கூறியே, இந்த மரண சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

வாகன விபத்தினால் மூளைக்கு செல்லும் இரத்தத்தில் ஏற்பட்ட கசிவே மரணத்திற்கான காரணம் என கூறப்பட்டுள்ளது.

Von Admin