நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களிள் மோதல் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

இந்த நிலையில், நேற்று இரவு யாழ்ப்பாணம் பிரதான வீதி, மடத்தடி பகுதியிலுள்ள எரிபொருள் நிலைய்தில் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டது.

இதனையடுத்து இரவென்றும் பாராது குறித்த எரிபொருள் நிலையத்திற்கு பெருமளவு மீனவர்களும், பிரதேசவாசிகளும் மண்ணெண்ணெய் பெற முண்டியடித்துள்ளனர்.