• Mo.. Jan. 20th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் பரிதாபமாக உயிரிழந்த இளம் தாய்

März 18, 2022

யாழ்ப்பாணம் – மீசாலைப் பகுதியில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று பிள்ளைகளின் தாய் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் மீசாலை ஐயா கடையடிப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண் மீது முச்சக்கரவண்டி மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்து காணப்பட்ட அவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பிள்ளைகளை பாடசாலையிலிருந்து அழைத்து வரச் சென்ற போதே அவர் விபத்தில் சிக்கியுள்ளார்.

இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர் மீசாலை வடக்கினைச் சேர்ந்த சிறீதரன் செல்வராணி என்று தெரியவந்துள்ளது.

இந்த விபத்தை ஏற்படுத்திய முச்சக்கரவண்டி தப்பிச் சென்றுள்ள நிலையில் முச்சக்கரவண்டி குறித்த தகவல் தருமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed