தாய்ப்பால் அருந்திவிட்டு உறக்கத்துக்குச் சென்ற 8 மாதப் பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. பால் புரைக்கேறியமையே உயிரிழப்புக்கான காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

வட்டுக்கோட்டை, அராலி வடக்கைச் சேர்ந்த யோகசீலன் கிருத்திகா என்ற பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது.
நேற்று (17) அதிகாலை தாய்ப்பால் அருந்திவிட்டு உறங்கிய குழந்தை அதிகாலை 4.30 மணியளவில் அசைவற்றுக் காணப்பட்டுள்ளது.

குழந்தை உடனடியாக யாழப்பாாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், குழந்தை ஏற்கனவே உயிரிழந்தமையை வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மரண விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்

Von Admin