ரூபிக்ஸ் க்யூப் எனப்படும் கனசதுரத்தை  சைக்கிள் ஓடிக்கொண்டே  சரியாகப் பொருத்தி சாதனை படைத்துள்ளார் சென்னையைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஜெயதர்ஷன் வெங்கடேசன். சாதரணமாகவே பலருக்கு இதனைப் பொருத்துவது கடினமாக இருக்கும். அப்படியிருக்க இந்தச் சிறுவனின் சாதனை வியந்து பாராட்டப்படுகின்றது. இதுகுறித்த வீடியோவை Guiness world records தனது அதிகாரப்பூர்வ சமூகவலைத் தளத்தில் வெளியிட்டுள்ளது.

சிறுவர்கள் அறிவுத்திறன் மிக்கவர்களாக விளங்கும் இக்காலத்தில் அவர்களைச் சரியான முறையில் வழிநடத்தினால் இன்னும் பல சாதனைகளைப் புரிவார்கள் என்பது நிச்சயம். 

Von Admin