• Di. Nov 12th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஐரோப்பியாவில் தஞ்சமடைய முயன்ற 70 பேர் உயிரிழப்பு

Mrz 19, 2022
Migrants are seen on a rubber dinghy as Libyan Coast Guards arrive to rescue them in the Mediterranean Sea, off the coast of Libya, October 18, 2021. REUTERS/Ayman Al-Sahili

லிபியாவிலிருந்து மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பியாவை அடையும் முயற்சியில், கடந்த இரு வாரங்களில் 70 புலம்பெயர்ந்தவர்கள் உயிரிழந்தும் காணாமல் போகியும் உள்ளனர். 

இதன் மூலம், 2022 ம் ஆண்டு தொடங்கியது முதல் இதுவரை மத்திய தரைக்கடலில் உயிரிழந்தவர்கள் அல்லது காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 215 ஆக உயர்ந்துள்ளது என புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

“மத்திய தரைக்கடலில் ஏற்படும் இந்த தொடர் உயிரிழப்பாலும் நிகழ்ந்து வரும் இந்த அசம்பாவிதத்தை தடுப்பதற்கான போதிய நடவடிக்கையின்மையாலும் நான் அதிர்ந்து போய் உள்ளேன்,” எனக் கூறியிருக்கிறார் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் லிபிய தலைமை அதிகாரியான பெடிரிக்கோ சோடா. 

போர் மற்றும் வறுமை காரணமாக ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடையும் நோக்கத்துடன் வெளியேறும் மக்களுக்கான முக்கிய புள்ளியாக ‘லிபியா’ இருந்து வருகிறது. இங்கிருந்து வெளியேறும் மக்கள் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளை சென்றடைய முயல்கின்றனர். 

இந்த வழியில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்கு சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் அர்ப்பணிப்புமிக்க தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மூலம் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.    

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed