• Do. Sep 12th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செயற்கைக்கோள்களை அழிக்கும் லேசர் கருவி!? பீதியை கிளப்பும் சீனா!

Mrz 19, 2022

எதிரி நாட்டு செயற்கைக் கோள்களை அழிக்கும் வகையில் சீனா ஒரு லேசர் அலை கருவியை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியின் முன்னேற்றத்தால் தகவல் தொடர்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளுக்காகவும் உலக நாடுகள் பல்வேறு செயற்கை கோள்களை வானில் நிலைநிறுத்தி வருகின்றன. இந்நிலையில் செயல் இழக்கும் செயற்கைக் கோள்களை வானிலேயே அழிப்பதற்கு உலக நாடுகள் பல தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றன.

புவி வட்டத்தில் தாழ்வாக சுற்றிவந்து கண்காணிக்கும் பிறநாட்டு உளவு செயற்கைக் கோள்களை வீழ்த்த ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கருவிகள் கண்டுபிடித்து வருகின்றன. இந்நிலையில் செயற்கைக்கோள்களை அழிக்க சீனா ரிலேடிவிஸ்டிக் கிளைஸ்டிரான் ஆம்பிளிபையர் என்ற மைக்ரோவேவ் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளதாக தைவான் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதைக் கொண்டு சீனாவால் விண்வெளியிலேயே எந்த செயற்கைக்கோளை வேண்டுமானாலும் செயலிழக்க செய்ய முடியும் என பேசிக் கொள்ளப்படுகிறது. சீனா ஒருவேளை அவ்வாறான கருவியை கண்டுபிடித்திருந்தால் அது உலக நாடுகளிடையே பிரச்சினையை கொண்டு வரக்கூடியதாக இருக்கும் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed