சர்வதேச தொலைபேசி அழைப்பு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தொலைபேசி நிறுவனங்கள் இது குறித்து அமைச்சு தெரியப்படுத்தியுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாய் 30 வீதம் வரை மதிப்பிழந்துள்ளதன் காரணமாக சர்வதேச தொலைபேசி அழைப்பு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

எனினும் தேசிய தொலைபேசி அழைப்பு கட்டணங்கள் மற்றும் இணையத்தள கட்டணங்களை அதிகரிக்க இதுவரை அனுமதி வழங்கவில்லை எனவும் தொழில்நுட்ப அமைச்சு கூறியுள்ளது.