நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் நிட்டம்புவ, கொங்கஸ்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இவ்விபத்து வேன் ஒன்று லொறியுடன் மோதியதில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் வேனில் பயணித்த ஐந்து வயது சிறுவன் படுகாயமடைந்து வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளான்.

உயிரிழந்த சிறுவன் வேன் சாரதியின் மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் வேனில் பயணித்த நான்கு பெண்களும் ஆண் ஒருவரும் காயமடைந்து வத்துபிட்டிவல வைத்தியசாலையிலும் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Von Admin