யாழ்ப்பாணம் கொழும்புத்துறையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தேநீர் அருந்திக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

அவருடைய உடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

மருத்துவ பரிசோதனையில் குறித்த இளைஞர் அதிகளவிலான ஹெரோயின் போதைப்பொருளை உட்கொண்டமையே மரணத்துக்கான காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளதாக மரணவிசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் தெரிவித்துள்ளார்.