ரஷ்யாவின் படையெடுப்பு நடவடிக்கை கடந்த மாதம் 24ஆம் திகதி ஆரம்பமானது. தொடர்ந்து உலக உணவு மற்றும் வலுசக்தி விலைகளில் உச்ச அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையானது, உலகளவில் 40 மில்லியன் மக்களை தீவிர வறுமைக்குள் இட்டுச் செல்லும் என அமெரிக்க சிந்தனைக்குழு  உறுதிப்படுத்தியுள்ளது.  

உலக கோதுமை உற்பத்தியில், ரஷ்யாவும் உக்ரைனும் 29 சதவீத பங்கை வகிக்கின்றன.

அத்துடன், உலக உரக் கேள்வியில் ரஷ்யாவும், பெலாரஸும் ஆறில் ஒரு பங்கை வகிக்கின்றன.இந்த நிலையில், தற்போதைய நிலைமையான வறிய நாடுகளைத் தாக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.