• Do. Sep 12th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உயர்ந்தன முட்டை,கோழி இறைச்சி விலைகளும்

Mrz 21, 2022

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதுடன் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

தற்போது முட்டையின் விலை 32 முதல் 33 ரூபாய் வரையிலும், கோழிஇறைச்சி 850 முதல் 900 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

முட்டை, கோழி இறைச்சி விலை உயர்வால் இவற்றை சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவிக்கும் கோழி மற்றும் முட்டை விற்பனையாளர்கள், கோழி தீவனத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed