• Di. Dez 3rd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கோர விபத்தில் சிக்கிய சீன விமானம்

Mrz 21, 2022

சீனாவில் 133 பயணிகளுடன் சென்ற விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 133 பயணிகளின் நிலைமை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து வுஜோ நகருக்கு இன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் 133 பேர் பயணித்தனர்.

விமானம் குவாங்சி மாகாணத்தில் உள்ள மலைபகுதியில் பறந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மலைமீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பெரும் தீ விபத்து எற்பட்டது.

இந்த விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மீட்புக்குழுவினர் விரைந்து சென்றுள்ளனர். விமானத்தில் பயணித்த 133 பேரின் நிலை என்ன ஆனது? என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed