இலங்கையில் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. இன்றைய விலை நிலவரத்தின் படி 24 கரட் தங்கப் பவுணின் விலை 161,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.

அத்துடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 149,000 ரூபாயாக உயர்வடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸின் விலை 1,918.84 டொலர் ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.