யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவில் 8 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 12 வயது மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தூர், கலைமதி, ஹிந்துசிட்டி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

8 வயது மகளை, 12 வயதான சிறுவன் துஷ்பிரயோகம் செய்ததாக தாயார் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் கைதான சிறுவன், நேற்று யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.

சிறுவனை, அரச அங்கீகாரம் பெற்ற நன்னடத்தை இல்லத்தில் தங்க வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Von Admin