• Di. Dez 3rd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் சங்கிலி அறுத்த குற்றத்தில் இருவர் கைது

Mrz 23, 2022

தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தில் இடம்பெற்ற  ஐந்தாவது கோபுரமான தலைவாசல் இராஜகோபுர கும்பாபிஷேக திருவிழாவில் அடியவர்களிடம் நகைகளைத் கொள்ளையிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவர் தலைமறைவாகியுள்ளனர்.


கிளிநொச்சி பகுதியில் இருந்து வந்த நால்வர் இந்தக் கொள்ளையில் ஈடுபட்ட நிலையில் இரு ஆண்கள் கைது செய்யப்பட்டதுடன் பெண்கள் இருவர் தலைமறைவாகிய நிலையில் தேடப்பட்டு வருகின்றனர்.தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தின் ஐந்தாவது கோபுரமான தலைவாசல் இராஜகோபுர கும்பாபிஷேக திருவிழா இன்று காலை இடம்பெற்றது.

திருவிழாவில் பங்கேற்ற அடியவர்கள் நால்வரிடம் தங்க நகைகள் அபகரிக்கப்பட்டன. அவர்கள் மூதாட்டி ஒருவரிடம் அவரை அச்சுறுத்தி தங்கச் சங்கிலி ஒன்றினை கொள்ளையடித்துள்ளனர். 
சம்பவம் தொடர்பில் நகைகளைப் பறிகொடுத்த நால்வரும் தெல்லிப்பழை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். அதனடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் ஆண்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.


கிளிநொச்சி பகுதியை சேர்ந்த 33 மற்றும் 37 வயதுடைய இருவரும் வான் ஒன்றில் வருகை தந்துள்ளனர். அவர்களது கொள்ளைக்கு உதவியாக வந்த பெண்கள் இருவர் தலைமறைவாகியுள்ளனர்.


அவர்களைத் தேடும் பணி காவல்துறையினரினால் முன்னெடுக்கப்படுகிறது.
சந்தேக நபர்கள் பயணித்த வான் காவல்துறையினரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களிடமிருந்து கைச்சங்கிலி ஒன்றும் சங்கிலி ஒன்றும் கைப்பற்றப்பட்டது என்று காவல்துறையினரினர் தெரிவித்தனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed