பளை – பேராலை பகுதியில் உள்ள வீடொன்றில் இடி விழுந்த சம்பவம் ஒன்று அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று புதன்கிழமை (23-03-2022) மாலை இடியுடன் கூடிய மழை பெய்து கொண்டிருந்த வேளை வீட்டில் இருந்த அனைவரும் அவர்களது வீட்டின் முன் ஹோலில் இருந்துள்ளனர்.

இதன்போது பாரிய சத்தத்துடன் மின்னல் வீட்டின் கூரை பகுதியிலேயே தாக்கியுள்ளது.

இந்த சம்பவத்தின் போது மின் குமிழ்களும் வெடித்து சிதறியுள்ளது, மின்சாரமும் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது. தெய்வாதீனமாக வீட்டில் இருந்த எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

Von Admin