யாழ்ப்பாணம், கூப்பன் முறையில் மண்ணெண்ணை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊர்காவற்துறையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஒரு குடும்ப பங்கீட்டு அட்டைக்கு 500 ரூபாய் எனும் அடிப்படையில் மண்ணெண்ணை வழங்கப்படுகின்றதாக கூறப்படுகின்றது. அத்துடன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் இல்லை எனும் அறிவித்தலும் ஒட்டப்பட்டுள்ளது.

அதேசமயம் ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் பிரிவில் ஒரே ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம் மாத்திரமே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Von Admin