கர்ப்பிணியான தன் மனைவியின் ஆசையை நிறைவேற்ற மாமனாரின் காணிக்குள் சென்று பலா மரத்தில் பலாக்காய் ஒன்றினை பறித்த கணவன் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்தள்ளார்.

எல்பிட்டிய வடக்கு, எகொடகெதர பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே.எம்.ஷெஹான் லசந்த (வயது 34) என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் , பலாய்க்காய் ஒண்றினை கேட்டுள்ளார் , அதனை பறிப்பதற்காக தனது மாமனாரின் காணிக்குள் சென்ற கணவன் பலாய்க்காய் பறித்த போது , அதனை கண்ணுற்ற மாமனார் அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

தகராறு உச்சக்கட்டம் அடைந்த நிலையில் தனது பலாக்காய் பறித்த தனது மருமகனை கூரிய ஆயுதத்தினால் குத்தியுள்ளார்.

அதில் படுகாயமடைந்த நபரை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் , சந்தேக நபர் தலைமறைவாகி உள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

Von Admin