• So.. März 8th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட இளைஞன்!

März 24, 2022

யாழ்.நகர் மத்தியபகுதியின் உணவுக் களஞ்சியப்பகுதியில் 38 வயதுடைய நபரொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் யாழ்.நகர் கஸ்தூரியார் வீதியில் உள்ள, மத்திய பிரதான உணவுக்களஞ்சிய பகுதியின், ராஜா சினிமா திரையரங்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

கடந்த 19 ஆம் திகதி வேலைக்கு போய்வருவதாக வீட்டாருக்கு கூறி விட்டு சென்று, இரவு வரை வராத காரணத்தினால், தமது முறைப்பாட்டினை பொலிஸ் நிலையத்தில் குடும்ப உறவினர்கள் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் அவரின் உடலம் காணப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.