தற்போது ஆறரை மணித்தியாலங்களுக்கு அமுலாக்கப்படும் மின்தடை அடுத்த வாரத்தில் பத்து மணித்தியாலங்களாக அதிகரிக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மின் உற்பத்தி நிலையங்களுக்கு அவசியமான எரிபொருள், நீர் இன்மையால் மின் உற்பத்தி குறைந்த மட்டத்தில் உள்ளமையே இதற்குக் காரணமாகும் எனத் தெரிய வருகிறது.

இதேவேளை, நீர் மின் உற்பத்தி நிலையங்களிலுள்ள நீர் இன்னும் பத்து நாட்களுக்கு மாத்திரமே போதுமானது எனவும், எதிர்காலத்தில் மழை கிடைக்காவிடின் மின்சார நெருக்கடி தீவிரமடையும் எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Von Admin