கொழும்பு 14, கஜிமாவத்த பகுதியில் நேற்று(24) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 21 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் நள்ளிரவு 12 மணியளவில் ஏற்பட்ட தீ அருகிலுள்ள வீடுகளுக்கும் பரவியதாக தொிவிக்கப்பட்டுள்ளது

தீயை அணைக்க ஏழு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தற்போது தீ முற்றாக அணைக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Von Admin