லண்டனில் இருந்து இலங்கை வந்த ஒருவர் இலங்கை உணவகம் ஒன்றில் கொத்துரொட்டியும் , பிளேன் ரீயும் சாப்பிட்டதற்கு 1620 ரூபா செலுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் நேற்றிரவு நீர்கொழும்பில் உள்ள உணவகம் ஒன்றின் தனது இராப்போசனத்தை முடித்துள்ளார்.  அவர் சாப்பிட்ட கொத்து ரொட்டிக்கு ரூபா 1500 ம், பிளேன் ரீக்கு ரூபா120 செலுத்தியதாக தெரியவருகின்றது.

இந்நிலையில் லண்டனில் இருந்து சென்றவர் இராபோசனத்திற்கு ஒரு நாள் மட்டுமே இவ்வாளவு பணம் கொடுக்க வேண்டியுள்ளதா என வியப்பை வெளியிட்டுள்ளார்.

அதேவேளை நாட்டில் அண்மைகாலமாக அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில் நாட்டு மக்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர் .  

Von Admin