யாழ்.நகர் பகுதியில் துவிச்சக்கர வண்டியை திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் பகுதியை சேர்ந்த 27 வயதான இளைஞன் ஒருவரே நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக சந்தேக்கத்திற்கு இடமான முறையில் துவிச்சக்கர வண்டி ஒன்றினை குறித்த இளைஞன் எடுத்து சென்ற போது , அப்பகுதியில் கடமையில் இருந்த யாழ்ப்பாண பொலிஸார் இளைஞனை மறித்து விசாரணைகளை முன்னெடுத்த போது , துவிச்சக்கர வண்டியினை இளைஞன் திருடி செல்வதனை அறிந்து இளைஞனை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

அதேவேளை யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பார்வையிட துவிச்சக்கர வண்டியில் வருவோர் , வைத்திய சாலை சூழலில் தமது துவிச்சக்கர வண்டிகளை நிறுத்தி விட்டு செல்லும் போது அவை களவாடப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

Von Admin