சுவிட்சர்லாந்தில் புடினின் காதலி இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

விளாடிமிர் புடினின் காதலி அலினா கபேவா (Alina Kabaeva), அவரது குழந்தைகளுடன் சுவிட்சர்லாந்தில் இருப்பதாக பல ஆண்டுகளாக வதந்திகள் பரவி வருகின்றன.

தற்போது உக்ரைனில் ரஷ்ய படையெடுப்புக்குப் பிறகு, இந்த வதந்திகள் மீண்டும் வெளிவந்துள்ளன. கபீவாவும் அவரது குழந்தைகளும் சுவிட்சர்லாந்தில், ஒருவேளை டிசினோவில் எங்கோ உள்ள உயர் பாதுகாப்பு அறையில் பதுங்கி இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால் இது உண்மை தான் என்பது இன்னும் சரிபார்க்கப்பட முடியவில்லை.

இந்நிலையில், இந்த வதந்தி குறித்து தேவையான சோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், சுவிட்சர்லாந்தில் இந்த நபர் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும் சுவிட்சர்லாந்தின் மத்திய நீதி மற்றும் காவல்துறை (FDJP) RTS இடம் கூறியுள்ளது.