துவிச்சக்கர வண்டியில் சென்றவரை பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த குடும்ப தலைவர் நேற்று மதியம் உயிரிழந்துள்ளார்.

கைதடி மேற்கைசேர்ந்த சீ.ரவீந்திரன் (வயது 55) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.   கடந்த  சனிக்கிழமை இரவு 9 மணியளவில் கைதடி – கோப்பாய் வீதியில் கைதடி கலைவாணி வித்தியாலயத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றிருக்கின்றது.

மோட்டார் சைக்கிளில் சென்றவர் இந்த விபத்தை எற்படுத்தியிருக்கின்றார். சம்பவத்தில் காயமடைந்த ரவிச்சந்திரன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுசிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று மதியம் உயிரிழந்துள்ளார்.

Von Admin