திருக்கடவூர் ஸ்ரீ அபிராமி அம்பாள் சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வர சுவாமி மகாகும்பாபிஷேகப் பெருவிழாவில், தருமை ஆதீனம் நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ கயிலை குருமகாசந்நிதானம் நான்கு இலங்கை ஆளுமைகளுக்குக் கௌரவ கலாநிதி விருது வழங்கி வாழ்த்தினார்.

இந்நிகழ்வில் “சிவாகம கலாநிதி” என்னும் விருது மரியாதைக்குரிய யாழ்ப்பாணம் நயினாதீவு சிவஸ்ரீ. ஐ.கை. வாமதேவ சிவாச்சாரியாருக்கு வழங்கப்பட்டது.

“திருமுறைக் கலாநிதி” என்னும் விருது ஓய்வு பெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர். நா.வி.மு நவரத்தினம் ஓதுவாருக்கு (நயினை) வழங்கப்பட்டது.

“பல்கலை வித்தகக் கலாநிதி”என்னும் விருது பலவழிகளிலும் ஊக்குவிப்பவரும் தமிழ்- திருமுறை பதிப்பிலும் Thevaram.org தளம் வழி பெரும் சைவப்பணி செய்பவருமான காந்தளகம் மறவன்புலவு க.சச்சிதானந்ததுக்கு (சிவசேனை) வழங்கப்பட்டது.

“நாதஸ்வரக் கலாநிதி” என்னும் விருது உலகளாவிய நிலையில் தன்னிகரில்லா ஆளுமையும், எளிமையான பண்பு நலனும் ஒருங்கே பெற்ற நமது ஈழ நல்லூர் பாலமுருகனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Von Admin