வடக்கு மாகாணக் கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் அனுசரணையுடன் வடமராட்சி தெற்கு, மேற்குப் பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் மனைப்பொருளியல் கண்காட்சி அண்மையில் கரவெட்டிப் பிரதேச செயலகத்தில் சிறப்புற நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கரவெட்டிப் பிரதேச செயலாளர், பிரதேச செயலகப் பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச மக்களும் கலந்து கொண்டனர்.