யாழில் பல வருடங்களாக ராகம் இசைக் குழுவில் பாடிவந்த இளம் பாடகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பாடகர் இன்றையதினம் (29-03-2022) செவ்வாய்கிழமை உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் செம்மணி வீதியைச் சேர்ந்த கனகரத்தினம் கனிஸ்ரன் வயது 40 என்ற இளம் பாடகர் தீடிரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

திருமணம் செய்து மனைவியுடன் வாழ்ந்து வந்த நிலையில் யாழில் இசைக்குழு மூலம் பல மேடைகளில் பாடி மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றவர் திடீர்  உயிரிழப்பு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

Von Admin