• Di. Nov 12th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ்.ஆவரங்கால் பகுதியில் ஏற்ப்பட்ட விபத்து.

Mrz 29, 2022

யாழ்ப்பாணம் – ஆவரங்கால் பகுதியில்    பட்டா ரக வாகனம் மோட்டார் சைக்கிள்களை எதிரே உள்ள பாலத்தினுள் மோதித் தள்ளியது.

யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பட்டா ரக  வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகே இருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியதில் ஒரு மோட்டார் சைக்கிள் பட்டா வாகனத்துடன் சேர்ந்து பாலத்தினுள் சென்றது.

சம்பவத்தில் பட்டா வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் இரண்டும் சேதமடைந்துள்ளடன் , மோட்டார் சைக்கிளுடன் நின்றவர் இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகினர்.

மேலும் பட்டா ரக வாகன சாரதியின் கவனக்குறைவால்  இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில், சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed