திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், அவரது உடல்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் கீரிமலை கூவில் பகுதியை சேர்ந்தவரும் , கெப்பற்றிக்கொலாவ குடும்பநல உத்தியோகஸ்தருமான கந்தசாமி நிதர்சினி (வயது 27) என்பவரே உயிரிழந்துள்ளார். 
கெப்பற்றிக்கொலாவையில் பணியாற்றி வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீர் சுகவீனம் காரணமாக கீரிமலையில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பியுள்ளார். 

இந்நிலையில் கடந்த 26ஆம் திகதி உடல் நிலை மோசமானதை அடுத்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மறுநாள் 27ஆம் திகதி அவர் மயக்க நிலைக்கு சென்றதை அடுத்து , மேலதிக சிகிச்சைக்காக யாழ், போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.


அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  அவரது மரணத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் உடல் கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Von Admin