• Di. Dez 10th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வவுனியா தேவாலயத்திற்குள்ளிருந்து மீட்கப்பட்ட சடலம்

Mrz 31, 2022

வவுனியா பிரதேசத்தில் அமைந்துள்ள தேவாலயம் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

வவுனியா சிவபுரம் பகுதியில் உள்ள தேவாலயத்தினுள் இருந்து 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரின் சடலத்தினை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

குறித்த கிறிஸ்தவ தேவாலயத்தினுள் தூக்கில் தொங்கிய நிலையில் நபர் ஒருவரின் சடலம் காணப்படுவதாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர். 

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டதோடு, சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நபரின் சடலத்திற்கு அருகே பயணப்பொதியொன்று காணப்படுவதுடன்  நபர் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed