யாழ்.கொக்குவில் கிழக்கு பகுதியில் நேற்றிரவு சுமார் 28 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபர்கள் தப்பி ஓடியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

 கொக்குவில் கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த நபர் தொடர்பாக பிரதேச இளைஞர்களினால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு விரைந்து செயற்பட்ட நிலையில் குறித்த வீடு முற்றுகையிட்டப்பட்டுள்ளது.

எனினும் பொலிசார் வருவதை உணர்ந்த சந்தேகநபர்கள் கஞ்சா பொதிகள் கைவிட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில்  மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படு வருகின்றது.

Von Admin