• Mi. Sep 11th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மின்சார நெருக்கடியால் வங்கிச் செயற்பாடுகளில் ஏற்பட்ட பாதிப்பு!

Apr 2, 2022

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி காரணமாக வங்கியின் செயற்பாடு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

மின்சாரம் தடைப்படும் போது வங்கிகள் மின்பிறப்பாக்கிகளை பயன்படுத்தி தங்கள் தொழிலை நடத்துகின்றன. எனினும், அவற்றுக்கான எரிபொருளை பெறுவது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது என தொழிற்சங்க செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க (ranjan senanayake) தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சில வங்கி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இரவில் வங்கிகள் மூடப்பட்டு ஏடிஎம் (ATM) இயந்திரங்கள் செயல்பட வேண்டும்.

ஆனால், தற்போதுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அது சவாலாக இருக்கின்றது. இந்நிலை தொடர்ந்து நீடித்தால் மின்சாரம் தடைப்படும் போது இயந்திரங்கள் பழுதடையும் என அவர் தெரிவித்துள்ளார்.

சில வங்கிகள் இரவு நேரங்களில் இயந்திரங்களை நிறுத்தி வைக்கப்படுவதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed