நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதிலும் ஏற்கனவே நாள் குறிக்கப்பட்ட ஏராளமான திருமணங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை(03.4.2022) யாழில் கோலாகலமாக நடந்தேறியுள்ளன.

அந்த வகையில் கோண்டாவில், திருநெல்வேலி, கொக்குவில், ஊரெழு, தெல்லிப்பழை உட்படப் பல பகுதிகளிலும் அமைந்துள்ள திருமண மண்டபங்களில் உற்றார், உறவுகள், அயலவர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரின் பங்களிப்புடன் குறித்த திருமணங்கள் நிறைவேறியுள்ளன. இதற்குப் பொலிஸார் உள்ளிட்ட தரப்பினர்கள் தடைகள் எதனையும் ஏற்படுத்தவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Von Admin