இலங்கை மின்சார சபைக்கு போதுமான எரிபொருள் வழங்கப்படும் என எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சுக்களின் செயலாளர்கள் தெரிவித்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனவே, திட்டமிடப்பட்ட மின்வெட்டு எதிர்வரும் நாட்களில் கணிசமாகக் குறைக்கப்படும் என அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.