சுவிஸ் நாட்டின் சூரிச் மாகாணத்தின் அடல்விஸ் நகரசபை தேர்தலில் ஈழ த்தமிழரான கண்ணதாசன் முத்துத்தம்பி பெரும் வெற்றியடைந்து மூன்றாவது தடவையாகவும் நகரசபையில் முக்கியம் வாய்ந்தவராகத் திகழ்கின்றார்.
கடந்த 27.03.2022 அன்று இடம்பெற்ற இத்தேர்தலில் நகரசபையில் 36 ஆசனங்களுக்காக 140ற்கு மேற்பட்டோர் போட்டியிட்டனர்.
இவர் அங்கத்துவம் வகிக்கும் கட்சியான சோசலிசக்கட்சியில் 23 பேர் போட்டியிட்டனர்.
இவர்களில் கண்ணதாசன் முத்துத்தம்பி 4(நான்காவது) இடத்தைப்பெற்றுள்ளமை இலங்கை உட்பட இந்நாட்டில் வாழ்கின்ற வெளிநாட்டு மக்களுக்கும் இந்நாட்டின் சோசலிசக் கட்சியின் கொள்கை வகுப்பாளர்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
கடந்த காலத்தில் நகரசபையிலிருந்து குழந்தைகள் தொட்டு முதியோர் வரை சகலரது நலன்களுக்காகவும் அவர்கள் சார்ந்த சமூகநல வேலைத்திட்டங்களுக்காகவும் தனது அதிகாரத்திற்குட்பட்டு சுவிஸ் நாட்டு மக்களோடும் இணைந்து கடுமையாக உழைத்த கண்ணதாசன் மீண்டும் தனது சேவையைத் தொடர வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.