யாழ்.வல்லை பகுதியில் இரு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இரு கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக பயணித்த நிலையில் பின்னால் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற கார் மீது மோதி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படாதபோதும் கார்கள் சேதமடைந்துள்ளன.

மேலும் விபத்து தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.