யாழ்ப்பாணம் இராஜதானியின் முதன்மைக் கோயிலாக விளங்கும் பிரசித்தி பெற்ற நல்லூர் ஸ்ரீ கைலாசபிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு விசேட அபிஷேக அலங்கார உற்சவம் இன்று வியாழக்கிழமை(07.4.2022) ஆரம்பமானது.

இன்று காலை-8 மணிக்கு விசேட அபிஷேகம், பூசை, ஆராதனைகளுடன் ஆரம்பமான இவ் ஆலய விசேட அலங்கார உற்சவத்தில் சித்திரைப் புத்தாண்டு தினமான எதிர்வரும்-14 ஆம் திகதி வியாழக்கிழமை காலை-8 மணிக்கு மகாரத உற்சவ விசேட பூசை வழிபாடுகளும், மறுநாள் வெள்ளிக்கிழமை காலை-8 மணிக்குத் தீர்த்த உற்சவமும் இடம்பெறும் என மேற்படி ஆலய ஆதீன ஹர்த்தாவும், பரம்பரை நிர்வாகியுமான சிவஸ்ரீ கு.குருசாமிசர்மா தெரிவித்தார்.

இதேவேளை, மேற்படி ஆலயம் பாலஸ்தாபனம் செய்யப்பட்டிருப்பதால் இந்த வருடமும் மஹோற்சவம் நடைபெறாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Von Admin