ரிபொருளுக்காக யாழில் பல இடங்களிலும் புதன்கிழமையும்
(06.4.2022) வாகனங்களுடன் வாகன உரிமையாளர்களும் மிக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
அந்த வகையில் யாழ்.திருநெல்வேலிச் சந்திக்கு அருகில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையம், திருநெல்வேலி பரமேஸ்வராச் சந்திக்கு அருகில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையம், உரும்பிராய் மற்றும் சுன்னாகம் பகுதிகளில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருளை(டீசல்) பெற்றுக் கொள்வதற்காக வாகனங்களுடன் வாகன உரிமையாளர்களும் மிக நீண்ட வரிசையில் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளைப் பெற்றுக் கொண்டனர்.
இதேவேளை, உரும்பிராயில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் புதன்கிழமை அதிகாலை-04 மணி முதல் வாகனங்களுடன் வாகன உரிமையாளர்களும் மிக நீண்ட நேரமாகப் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் காத்துநின்ற நிலையில் இன்று பிற்பகல்-05 மணிக்குப் பின்னரே டீசல் பவுஸரில் மேற்படி எரிபொருள் நிலையத்திற்கு விநியோகிக்கப்பட்டது.
இந் நிலையில் இன்று இரவிரவாக குறித்த எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகம் இடம்பெற்று வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.