• Mo.. Juli 20th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் போதை மருந்துடன் ஒருவர் கைது

Apr. 8, 2022

ஊர்காவற்துறை காவல் துறை   பிரிவிற்குட்பட்ட நாரந்தனை தெற்கு பகுதியில், ஊசி மூலம் ஏற்றப்படும் போதை மருந்தை உடைமையில் வைத்திருந்த 47 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊர்காவற்துறை காவல் துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் காவல் துறையுடன் இணைந்து நேற்று இக் கைது நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நேற்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், குறித்த போதை மருந்து எங்கிருந்து கிடைத்தது என்ற விசாரணைகளை ஊர்காவற்துறை காவல் துறையினர்  மேற்கொண்டு வருகின்றனர்.   

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.