ஏழாலை கண்ணகை அம்பாள் ஆலய வருடாந்த அலங்காரத் திருவிழா கடந்த புதன்கிழமை(06.4.2022) மாலை ஆரம்பமாகியது.

தொடர்ந்தும் 11 தினங்கள் இடம்பெறவுள்ள இவ் ஆலய அலங்கார உற்சவத்தில் தினமும் பிற்பகல்-6 மணிக்கு சமயச் சொற்பொழிவு மற்றும் பிரார்த்தனையும் அதனைத் தொடர்ந்து வசந்தமண்டபப் பூசை, சுவாமி வீதி உலா என்பன இடம்பெறும்.

இதேவேளை, எதிர்வரும்-16 ஆம் திகதி சனிக்கிழமை காலை-7 மணிக்கு அபிஷேகம் பூசைகளுடன் ஆரம்பமாகி முற்பகல்-10 மணிக்கு சித்திரைப் பூரணைத் தீர்த்தத் திருவிழாவும் தொடர்ந்து பிற்பகல்-1 மணிக்கு மகேஸ்வர பூசையும்(அன்னதானம்) இடம்பெறும். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை-4 மணிக்கு அபிஷேகம், பூசைகளுடன் ஆரம்பமாகித் தொடர்ந்து வைரவர் பொங்கலும் நடைபெறும்.

Von Admin