• Do.. Feb. 13th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அச்சுவேலியில் பார ஊர்தியில் சிக்குண்டு முதியவர் மரணம்!

Apr. 10, 2022

அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலை பெறுவதற்கு நீண்ட வரிசையில் நின்றுகொண்டிருந்த, அச்சுவேலி பத்தமேனி பகுதியைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை கனகரத்தினம் 70 வயது முன்னோக்கி நகர்ந்த பாரவூர்தியில் நசியுண்டு உயிரிழந்துள்ளார்.

சிறு வீதியிலிருந்து பிரதான வீதிக்குள் நுழைய இன்று (10.04.22) காலை 10 மணியளவில் முதியவர் முற்பட்ட வேளையில், டீசலுக்காக காத்திருந்த பாரவூர்தி நகர்ந்ததால் சில்லுக்குள் நசியுண்டு முதியவர் உயிரிழந்துள்ளார்.

சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பார ஊர்தி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்த அச்சுவேலி போக்குவது காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை ​மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed