தொடர்ந்தும் 19 தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலயப் பிரம்மோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும்-22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை திருமஞ்ச உற்சவமும், 25 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை கைலாச வாகன உற்சவமும், 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை பூந்தண்டிகை உற்சவமும், 27 ஆம் திகதி புதன்கிழமை மாலை குதிரை வாகன உற்சவமும், 28 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை சப்பர உற்சவமும், 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை-8 மணிக்கு தியாகராஜ மூர்த்திகள் சகிதம் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளிப் பஞ்ச இரதோற்சவமும், மறுநாள் சனிக்கிழமை காலை-09 மணிக்குத் தீர்த்தோற்சவமும், அன்றையதினம் மாலை கொடியிறக்க உற்சவமும் இடம்பெறும்.