இணுவில் மஞ்சத்தடி ஸ்ரீ அருணகிரிநாத சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை புதன்கிழமை(13.4.2022) முற்பகல்-10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.

தொடர்ந்தும் 12 தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத்தில் எதிர்வரும்-22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல்-10 மணிக்கு வேட்டைத் திருவிழாவும், அன்றையதினம் மாலை-05 மணிக்கு சப்பரத் திருவிழாவும், 23 ஆம் திகதி சனிக்கிழமை காலை-08.30 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை-09 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும், அன்றையதினம் மாலை-06 மணிக்கு கொடியிறக்க உற்சவமும் இடம்பெறும்