• Do.. Jan. 23rd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

குப்பிழான் கன்னிமார் கெளரி அம்பாள் சப்பறத் திருவிழா இன்று.

Apr. 14, 2022

யாழ்.குப்பிழான் தெற்கு வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் சப்பரத் திருவிழா சித்திரைப் புத்தாண்டு நன்னாளான இன்று வியாழக்கிழமை(14.4.2022) இரவு-07 மணிக்குச் சிறப்பாக இடம்பெறவுள்ளது.

கடந்த-07 ஆம் திகதி முற்பகல்-11 மணிக்கு இவ்வாலய வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ந்தும் பத்துத் தினங்கள் இடம்பெற்று வரும் நிலையில் இன்றையதினம் சப்பரத் திருவிழாவும், நாளை வெள்ளிக்கிழமை(15.4.2022) முற்பகல்-10 மணிக்குத் தேர்த் திருவிழாவும், நாளை மறுதினம் 16 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல்-11 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும், அன்றையதினம் மாலை கொடியிறக்க உற்சவமும் இடம்பெறும்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed