சித்திரை புதுவருட தினத்தன்று கைதடி வடக்கு பகுதியில் மின்சாரம் தாக்கி குடும்பப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.புதுவருட தினத்தன்று காலையில் வீட்டில் உள்ளவர்கள் ஆலயத்திற்கு சென்ற சமயம் குறித்த பெண் தொலைக்காட்சி பெட்டியை இயக்க முற்பட்ட வேளையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைதடி வடக்கு கைதடிப் பகுதியைச் சேர்ந்த 59 வயதான கு.பரமேஸ்வரி என்ற பெண்ணே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவரின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Von Admin