சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்று ( வியாழக்கிழமை ) ஆலயங்களில் விசேட பூஜைகள் இடம் பெற்றுள்ளது. அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர  ஆலயத்தில் இன்று வியாழக்கிழமை (14) காலை விசேட பூஜைகள் நடைபெற்றன.


ஆலயத்தின் பிரதமகுரு சிவ ஸ்ரீ  கருணானந்த குருக்கள் தலைமையில் இன்று காலை 8.41 மணிக்கு விசேட  ஆராதனைகள் நடை பெற்றதை தொடர்ந்து விசேட சித்திரைப் புத்தாண்டு பூஜை இடம்பெற்றன.

Von Admin