• Mi.. März 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

முள்ளியவளை பகுதியில் விபத்து குமுழமுனையினை சேர்ந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!

Apr. 15, 2022

முள்ளியவளை களிக்காட்டுப்பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து உந்துருளி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு நெடுங்கேணி வீதியில் களிக்காடு எனப்படும் பகுதியில் நேற்று இரவு உந்துருளியில் பயணித்த 44 அகவையுடைய 6 ஆம் வட்டாரம் குமுழமுனையினை சேர்ந்த சுப்பிரமணியம் கோபிநாத் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே விபத்தின் உயிரிழந்துள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும்தெரியவருகையில் நேற்று 14.04.2022 குறித்த குடும்பஸ்தர் தண்டுவானில் இருந்து முள்ளியளை நோக்கி உந்துருளியில் இரவு 10.00 மணியளவில் பயணித்துள்ளார் களிக்காட்டுப்பகுதியில் உந்துருளி வேகமாக சென்று பாலத்தில் மோதிவிட்டு வயல்கம்பிக்கட்டையில் மோதி விபத்தினை ஏற்படுத்pதயுள்ளதுடன் உயிரிழந்தவரின் உடலத்தில் இருந்து சுமார் 8 மீற்றர் தொலையில் வயலுக்குள் உந்துருளி பாய்ந்துள்ளது.

இருபது மீற்றர் தூரம் வரையில் உந்துருளி வேகமாக பாய்ந்து விபத்தினை ஏற்படுத்தியுள்ளது. பலத்த காயமடைந்த குடும்பஸ்தர் இரவு வேளை ஆட்கள் நடமாட்டம்குறைவான வீதியாக காணப்பட்டுள்ளதால் உயிரிழந்துள்ளார்.

விபத்து குறித்து முள்ளியவளை பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி த.கெங்காதரன் சம்பவ இடத்திற்கு வருகைதந்து பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் உடலம் பிரோத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டுள்ளது

பிரேத பரிசோதனைகளின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொசார் தெரிவித்துள்ளார்கள்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed